Công ty in
Bài mới cập nhật
Loading...
Sunday, June 30, 2013

காதலிக்க ஆசைப்படும் ப்ரியா ஆனந்த்!

சினிமாவில் படத்துக்குப்படம் ஹீரோக்களை காதலிப்பது போல் நடித்து வரும் ப்ரியா ஆனந்துக்கு நிஜத்திலும் காதலிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளதாம். இதுபற்றி அவர் கூறுகையில், வாமனன் படத்தில் சினிமாவுக்கு வந்த என்னை, காதலிப்பது போல் நடிக்க சொன்னபோது, அந்த காதலி வேடத்தில் என்னால் முழுசாக கலந்து நடிக்க முடியவில்லை. ஏதோ நடித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதையடுத்து, தமிழ், தெலுங்கு, இந்தி வரை இப்போது நடித்து விட்டேன். காதல் என்றால் என்ன என்பதையும் உணர்ந்துவிட்டேன். ஆனால், சினிமாவில் காதலிப்பது போன்று நடிக்கத்தானே முடியும். அதனால் நிஜ வாழ்க்கையிலும் மனசுக்கு பிடித்தமான ஒருவரை காதலிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் ஏற்பட்டிருக்கிறது என்கிறார் ப்ரியாஆனந்த்,

அப்படியென்றால் காதலர் வேண்டுமே? இப்போது சினிமாவில் பிசியாக இருப்பதால் காதலிக்க நேரமில்லைதான். என்றாலும், காதலர் என்ற ஒருவர் என்முன் தோன்றும்போது, ஆசை தீர காதலிப்பேன். பல ஆண்டுகள் அவரை காதலித்து விட்டு பின்னர் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லும் ப்ரியாஆனந்துக்கு சிலரைப்போன்று தொழிலதிபர் மோகமெல்லாம் இல்லையாம். தன்னுடன் நடிக்கும் சக நடிகராக இருந்தாலும் மனசுக்குப்பிடித்தவராக இருந்தால் அவரையே காதலித்து திருமணம் செய்து கொள்வாராம்.

0 comments:

Post a Comment