நாடோடிகள், தோழா உள்பட சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர் விஜய்வசந்த். மதில்மேல் பூனை என்ற படத்தில் நாயகனாக நடித்தார் அந்த படம் வெற்றி பெறவில்லை. இருப்பினும் இப்போது தெரியாம உன்னை காதலிச்சிட்டேன் என்றொரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய படத்தின் இயக்குனர், இந்த படத்தில் விஜய்வசந்தின் கேரக்டரின் பெயர் கார்த்திக். அதனால் நவரச நாயகன் கார்த்திக் போலவே அற்புதமாக நடித்திருக்கிறார் என்று ஒரு உதாரணத்துக்காக சொன்னார். ஆனால், அதைக்கேட்டு அதிர்ச்சியில் அலறி விட்டார் விஜய்வசந்த்.
இதையடுத்து பேச வந்த அவர், என்னை இதுபோன்று மீடியாக்களிடம் கோர்த்து விடுவதில் இந்த இயக்குனர்களுக்கு என்னதான் சந்தோசமோ தெரியவில்லை என்று ஆரம்பித்தவர், மதில் மேல் பூனை படத்தில் நான் நடித்தபோது, என்னை சூப்பர் ஸ்டார் என்றார்கள். இப்போது நவரச நாயகன் கார்த்திக் என்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார், நவரச நாயகனெல்லாம் ரொம்ப பெரிய நடிகர்கள். அதனால் யாராக இருந்தாலும் பேசுவதற்கு முன்பு கொஞ்சம் யோசித்து விட்டு பேசுங்கள். நீங்கள் இப்படி எதையாவது பேசி விட்டு சென்று விடுவீர்கள் அதன்பிறகு என் தலையைத்தான் மீடியாக்கள் உருட்டும் என்றும் சொல்லி, மீடியாக்களின் வாயில் சிக்காமல் தப்பித்துக்கொண்டார் விஜய்வசந்த்.

0 comments:
Post a Comment