Công ty in
Bài mới cập nhật
Loading...
Sunday, June 30, 2013

பூர்ணாவை படுக்க வைத்து முதுகில் மிதித்த ஹீரோ

அடுத்த அசின் என்று கோலிவுட் நடிகர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர் பூர்ணா. ஆனால் யாருடைய நம்பிக்கையும் பலிக்கவில்லை. இப்போதுவரை அவரது மார்க்கெட் தகிடதோம் போட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ்தான் சரியில்லை என்று ஆந்திராவுக்கு போனால் அங்கேயும் அவரது ராசி ஒர்க்அவுட் ஆகவில்லை. நடித்த படங்கள் எதுவும் ஓடாததால் சில படங்களோடு பூர்ணாவை அங்கிருந்து துரத்தியடித்து விட்டார்கள்.

அதனால் மறுபடியும் எந்த மொழி சினிமாவும் தமிழுக்கு ஈடாகாது என்று பேசிக்கொண்டு கோலிவுட் இயக்குனர்களின் காலை சுற்றிக்கொண்டு சான்ஸ் கேட்டு வருகிறார். அப்படி எடுத்த முயற்சியின் பயனாக, கரு.பழனியப்பன் இயக்கியுள்ள ஜன்னல் ஓரம் படம் பூர்ணாவுக்கு கிடைத்தது. அதே படத்தில் புதிய வரவு நடிகை மனீஷா யாதவுக்கு முதன்மை நாயகி வேடம் கொடுத்து விட்டு, பூர்ணாவுக்கு செகண்ட் ஹீரோயினி வேடம் கொடுத்தபோதும் எந்தவித சலனமும் இன்றி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், ஷக்திக்கு ஜோடியாக படம் பேசும் என்ற படத்தில் பூர்ணாவுக்கு கதாநாயகி வேடம் கிடைத்துள்ளது. இதுவரை நடித்துள்ள படங்களில் பட்டாம் பூச்சியாய் சிறகடித்தபடி பட்டுத்துணி களையாமல் நடித்த பூர்ணாவை இந்த படத்தில் முதல் ஷாட்டிலேயே தரையில் படுக்க வைத்து முதுகில் ஹீரோவின் கால் மிதிப்பது போன்றுதான் படமாக்கினார்களாம். ஆக படம் முழுக்க என்னை துவைத்து எடுத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு உடல் உழைப்பையும் கொடுத்து இப்படத்தில் நடித்திருக்கிறேன் என்று சொல்லும் பூர்ணா. நான் பட்ட கஷ்டத்துக்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்கிறார்.

0 comments:

Post a Comment