Công ty in
Bài mới cập nhật
Loading...
Sunday, June 30, 2013

ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார் கிரிக்கெட் சூதாட்ட ஹீரோ ஸ்ரீசாந்த்!

கேரளாவைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இவரைப்போலவே மேலும் சில வீரர்களும் கைதானார்கள். ஆனால், சிறைவாசம் மேற்கொண்ட ஸ்ரீசாந்த் தற்போது ஜாமீனில் வெளியே வந்து விட்டார். இதைத் தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

மலையாளத்தில் கவுபாய் என்ற படத்தை இயக்கிய பாலசந்திரகுமார் என்பவர்தான் அடுத்து தான் இயக்கும் பிக்பாக்சர் என்ற படத்தில் ஸ்ரீசாந்த்தை ஹீரோவாக்குகிறாராம். தமிழ், மலையாளத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பை வெளிநாடுகளிலும் நடத்த திட்டமிட்டிருந்த இயக்குனர், ஸ்ரீசாந்தின் பாஸ்போர்ட் போலீஸ்வசம் உள்ளதால், படப்பிடிப்பை இந்தியாவில் மட்டுமே நடித்த உள்ளாராம்.

0 comments:

Post a Comment