நேரம் படத்தில் நடித்தவர் நஸ்ரியா நசீம். இவர் தற்போது தனுசுடன் நய்யாண்டி, ஆர்யாவுடன் ராஜா ராணி, ஜெய்யுடன் திருமணம் என்னும் நிக்கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் திருமணம் என்னும் நிக்கா படத்தில் நடித்து முடித்து விட்டவர், தனுஷ்-ஆர்யா நடிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆர்யா நடிக்கும் படத்தில் இன்னொரு ஹீரோயினாக நயன்தாராவும் இருப்பதால், சிங்கிள் ஹீரோயினாக தனுசுடன் நடிக்கும் நய்யாண்டி படத்தில் மட்டுமே நஸ்ரியா கவனம் அதிகமாக உள்ளது. அதனால் அவர்கள் கேட்கும்போதெல்லாம் கால்சீட் கொடுத்து நடித்து வருகிறாராம. அதேசமயம், ராஜாராணி படத்துக்கு கால்சீட் கொடுத்திருப்பதைகூட மறந்துவிட்டு தனுசுடன் நய்யாண்டி படத்திற்கும் அதேநாளில் கால்சீட் கொடுத்து அவுட்டோரில் நடித்து வந்தாராம் நஸ்ரியா.
இதன்காரணமாக, இரண்டுமுறை ராஜா ராணி படப்பிடிப்பு அவரால் ரத்து செய்யப்பட்டுள்ளதாம். இதனால் அப்படத்தின் தயாரிப்பாளரான டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் செம டென்சனாகி விட்டாராம். அதையடுத்து, நஸ்ரியா நசீம் மீது தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிததுள்ளார். அதையடுத்து, அவுட்டோரில் இருந்து உடனடியாக சென்னை வரவழைக்கப்பட்ட நஸ்ரியாவிடம் விசாரித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், இனி இதுபோன்று கால்சீட் குளறுபடி செய்யக்கூடாது என்று அறிவுறுததியதோடு, நய்யாண்டி-ராஜாராணி படங்களில் எந்தெந்த தேதிகளில் நடிக்க வேண்டும் என்றும் கால்சீட்டை பிரித்துக்கொடுத்து விட்டார்களாம்.
அதைத் தொடர்ந்து, தான் செய்த தவறுக்கு மன்னிப்புகேட்ட நஸ்ரியா, இனி இதுபோன்று கால்சீட் பிரச்னை செய்ய மாட்டேன் என்றும் உறுதி அளித்துள்ளாராம்.

0 comments:
Post a Comment