Công ty in
Bài mới cập nhật
Loading...
Sunday, June 30, 2013

செலக்டீவான கதைகளில் மட்டுமே நடிப்பாராம் விமல்!

களவாணி விமலின் மார்க்கெட் இப்போது திருப்திகரமாக இல்லை. கூத்துப்பட்டறையில் இருந்து அவருடன் வந்த மைனா விதார்த்தின் நிலைமையும் அவரைப்போலவே இருக்கிறது. ஆனால் இந்த நேரத்தில் விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன் இருவரது மார்க்கெட்டும் எகிறிக்கொண்டேயிருப்பது இந்த இரண்டு கூத்துப்பட்டறை நடிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. 

அதிலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நானுந்தான் நடிச்சேன். ஆனா எப்படி என்னைவிட சிவகார்த்திகேயனுக்கு பேரு கெடைச்சது ஒன்னுமே புரியலையே என்று புலம்புகிறார் விமல். ஆனால், இதை இப்படியே விடக்கூடாது என்று பொங்கி எழுந்திருக்கும் விமல், இனி கண்ட கம்பெனிகளுக்கெலலாம் கால்சீட் கொடுப்பதை நிறுத்தப்போகிறாராம்.

வருடத்துக்கு ரெண்டு படம் என்றாலும், பெரிய இயக்குனர், பெரிய கம்பெனி படம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். தற்போது எழில் இயக்கத்தில் தேசிங்குராஜா படத்தில் எம்ஜிஆர் ரசிகராக நடித்திருக்கும் விமல், இந்த படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுக்கும், அதனால் இனி இதேபோல் செலக்டீவான படங்களாக மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று கூறுகிறார்.

0 comments:

Post a Comment